மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாநிலத்தையொட்டியுள்ள கடல்பகுதியின் அருகே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென்மேற்கு பசிபிக் கடலோரம் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாநிலத்தையொட்டியுள்ள கடல்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவில்லை.