இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு வங்காள தேச அணி கடும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விராட் கோலி கூறுகையில் ‘‘வங்காள தேச அணி எப்போதும் சவாலானதே. அவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிப்பது யாருக்கும் எந்த நேரத்திலும் ஆச்சரியம் இல்லை. அவர்களுடைய கிரிக்கெட் உண்மையிலேயே முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்களுடைய செட்-அப்க்கு பாராட்டுக்கள். அந்த அணியின் சில முக்கிய வீரர்கள் பொறுப்புக்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நாளில் அவர் மிகவும் அபாயகரமானவர்கள். எல்லோரும் அதை உணர்ந்துள்ளார்’’ என்றார்.