புதிய முதலமைச்சர் தெரிவு? ஆளுநரிடம் மாவை கூறிய பதில் இதுதான்..

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இருவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று காலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,

“வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அழைப்பின் பிரகாரமே அவரை சந்தித்தேன், முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயப்பட்டது.

அடுத்த முதலமைச்சர் தெரிவு தொடர்பில் கட்சியின் தலைவரான என்னால் முடிவுகளை எடுக்க முடியாது. கட்சியின் செயலாளரே அம்முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே கட்சியின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இன்று மதியம் கலந்தாலோசித்து எடுக்கப்படும் முடிவுகளை அறிவிப்பதாக ஆளுநரிடம் தெரிவித்தேன்” என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.