இவர் தற்போது பியாண்ட் த க்ளவுட்ஸ் (Beyond The Clouds) என்ற பெயரில் ஹிந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் மஜித் மஜிதி.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே சமயத்தில் உருவாகி வரும் இந்த படம், தமிழிலும் தயாராகிறது. ஒரே சமயத்தில் மும்மொழி (தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம்) களில் தயாராகி வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள்.
உலகளவில் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இதில் ஹிந்தியின் முன்னணி நடிகரான ஷாகித் கபூரின் இளைய சகோதரர் இஷான் கட்டார் நாயகனாகவும், மாளவிகா மோகனன் என்ற மலையாள நடிகை நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கேரக்டரில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகையான ஜி.வி.சாரதா நடிக்கிறார். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ஐகேன்டி ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்‘ அண்ணன் தங்கை இடையேயான உறவை மையப்படுத்திய கதையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.