ஊழல் குறித்து நடவடிக்கை எடுத்ததால் என் மீது குற்றச்சாட்டு! விக்னேஸ்வரன் ஆதங்கம்

பதவிலிருந்து என்னை நீக்குவதால் மக்கள் சேவையை அத்துடன் நிறுத்திக்கொள்வேன் என்று நினைப்பது பிழையான கருத்து தான் நம்புவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்யைில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நான் என்னுடைய கடமைகளை செய்துகொண்டு தான் போகின்றேன். இது சிலருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்து கூடும்.

இதன் காரணமாகவே என் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிகின்றது. அது குறித்து நான் கவலைப்படவில்லை. ஒருவர் கடமையை செய்துகொண்டு போகும் போது வெற்றி தோல்வி என்பது தெரியாது.

ஆகவே, நான் என்னுடைய கடமைகளை செய்துகொண்டு போவேன். ஊழல் சம்பந்தமாக நான் எடுத்து நடவடிக்கை சிலருக்கு பிடிக்கவில்லை போலிருக்கின்றது.

ஊழல் குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுக்காதிருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பியிருப்பார்கள். எனினும், நடவடிக்கை எடுத்தப்படியால் என் மீது குற்றம் சுமத்தப்படுவதாக” அவர் மேலும் தெரிவித்தார்.