]2017ற்குள் 9610 பேருக்கு இரட்டைக் குடியுரிமை!

இந்த ஆண்டு நிறைவிற்குள் 9610 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நிஹால் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை வழங்கும் புதிய வழிமுறைகளின் கீழ் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையில் 36,235 பேர் வரையில் இரட்டைக் குடியுரிமை கோரி, விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவ்வாறு விண்ணப்பம் செய்தவர்களில் 26,625 பேருக்கு இரட்டைக் குடியுரிமை குறித்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை வழங்குவது தொடர்பில் உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தொடர்ந்தும் அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.