யாழ். மாவட்ட மக்களின் கவனத்திற்கு!

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்றும் மின்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6 மணிவரை இவ்வாறு மின் விநியோகத்தடை ஏற்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

குறிப்பாக யாழ். மாவட்டத்தின் வலந்தலை சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, காரைநகர் சிவன் கோவிலடி ஆகிய பகுதிகளிலும்,

மற்றும் பொன்னாலை கிருஸ்ணன் கோவிலடி மற்றும் பொன்னாலை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பகுதிகளிலேயே மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக குறிப்பாக யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.