இன்றைய ராசி பலன்கள் 16.06.2017

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர் கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நண்பர்கள் ஒத்துழைப் பார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டா கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

  • கடகம்

    கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர்கள், நண்பர் களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள் வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார் கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். அமோகமான நாள்.

  • துலாம்

    துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறை வேறும். உங்களை சுற்றி யிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்

  • விருச்சிகம்

    விருச்சிகம்: பால்ய நண்பர் கள் உதவுவார்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு கள் அதிகரிக்கும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

  • மகரம்

    மகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மன உளைச்சல் ஏற்படும். குடும் பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். பழைய கடன் பிரச்னை அவ்வப் போது மனசை வாட்டும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. யாருக்காகவும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் மேலதிகாரியால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.