கோவா மாநிலத்தில் இந்து ஜனஜாகிருதி சமதி சார்பில் இந்து மதமாற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் சனாதன் தர்மா பிரசார சேவா சமிதி என்ற அமைப்பின் தலைவரும், பெண் சாமியாருமான சாக்ஷி சரஸ்வதி கலந்துகொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:-
இந்து மக்களை முதலில் நாம் இந்துக்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் அவர்கள் மதச்சார்பின்மை என்ற பெயரில் மத உணர்வு இல்லாமல் இருக்கின்றனர்.பசு நம்முடைய தாய். நம்முடைய தாயையே நாம் உணவாக உட்கொள்வதா?. பெருமைக்காக மாட்டுக்கறி உண்பவர்களை நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும். அப்போது தான் மாடுகளை பாதுகாப்பதில் மற்றவர்கள் பொறுப்பாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பெண் சாமியார் சாக்ஷி சரஸ்வதியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.