சீனாவில் வகுப்புகளை கட் அடிக்கும் மாணவர்களுக்கு நூதன தண்டனை

மத்திய சீனாவில் உள்ள உஹான் என்ற இடத்தில் சர்வதேச பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த மாணவர்கள் அடிக்கடி வகுப்புகளை கட் அடித்து விட்டு ஊர் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதை தடுப்பதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் நூதன தண்டனை ஒன்றை அறிவித்துள்ளது.

அதாவது மாணவர்களோ அல்லது மாணவிகளோ வகுப்புகளை கட் அடித்தால் அவர்கள் எதிர் பாலினத்தினரின் அறைகள் மற்றும் கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பல மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைக்கு பயந்து மாணவர்கள் வகுப்புகளை கட் அடிப்பது வெகுவாக குறைந்துள்ளது.

இந்த தண்டனை சம்பந்தமாக சூன்புரோன் என்ற மாணவி கூறும்போது, நான் இதற்கு முன்பு பல தடவை வகுப்பை கட் அடித்துள்ளோன். இனி ஒரு போதும் கட் அடிக்க மாட்டேன்.

ஏனென்றால் மாணவர்களின் கழிவறை மிகவும் துர்நாற்றம் வீசும். அதை என்னால் ஒரு போதும் சுத்தம் செய்ய முடியாது என்று கூறினார்.

மாணவர்களுக்கு இவ்வாறு தண்டனை கொடுப்பது சம்பந்தமாக சிலர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.