அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ரிலே மற்றும் ஹீத்தர் தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி தலை ஒட்டி பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.
ஹீத்தர் 11 மாத கர்ப்பிணியாக இருந்த போது இந்த குழந்தைகள் பிறந்தது. இந்த குழந்தைகளுக்கு அப்பே, எரின் என்று பெயரிடப்பட்டது.
இந்நிலையில், 10 மாதங்கள் ஆன நிலையில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் கடந்த வாரம் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தென்கிழக்கு பென்சைல்வனியாவின் பிலடில்பியா பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சுமார் 11 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.
குழந்தைகளை பிரிப்பதற்கான அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலாக இருந்ததாக, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைகள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
10 மாதங்களுக்கு பிறகு தங்களது குழந்தைகள் தனித்தனியே இருக்கிறார்கள் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் வீட்டிற்கு சென்று இந்த மகிழ்ச்சியை விமர்சையாக கொண்டாட உள்ளதாக கூறினர்.