ஹர்த்தாலுக்கு யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கெதிராகத் தமிழரசுக்கட்சி வடமாகாண எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததைக் கண்டித்தும் நீதியை நிலைநாட்ட முயற்சிக்கும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ் மக்கள் பேரவையால் இன்று வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்பிற்குப் பல்கலைக்கழக ஆசிரியர்ச ங்கத்தினராகிய நாமும் எமது முழு ஆதரவினையும் வழங்குகின்றோம் என  குறிப்பிடப்பட்டுள்ளது.