ஐ.எஸ் குழுவின் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டிருக்கலாம்

சிரியாவில் ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதல் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாதக்குழுவின் தலைவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பாக்தாதியும் கிட்டத்தட்ட 330 போராளிகளும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
சிரியாவின் வடபகுதியில்இ ஐ.எஸ் தீவிரவாதக் குழுவின் தலைநகராக விளங்கிய ராக்காவில் அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த ஐ.எஸ் அமைப்பின் கவுன்சில் கூட்டத்தை இலக்கு வைத்து விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது.
ஐ எஸ் அமைப்பின் தலைவரை இலக்கு வைத்து தாக்குதல்
மொசூல் போரில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது: ஐ.எஸ் குழுவின் தலைவர் பாக்தாதி இறந்துவிட்டார் என்று இதற்கு முன்பே பல செய்திகள் வெளியாகியிருந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
பாக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்காவால் உறுதிபடுத்த முடியவில்லை என்று அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜான் டோரியான் கூறுகிறார்.
பாக்தாதி கொல்லப்பட்டது தொடர்பாக எந்தவித அதிகாரபூர்வ கருத்தையும் சிரியா அரசு தெரிவிக்கவில்லை.