நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றால் வடக்கின் கொந்தளிப்பு அடங்கும்! விக்னேஸ்வரன்

ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட தமக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்பட்டால் வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என சமயத் தலைவர்களிடம் கூறியதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாண நிலவரம் குறித்து அங்குள்ள சமயத் தலைவர்களுக்கு விளக்கமளித்ததாக முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என ஆதினம் தம்மிடம் வினவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள மனுவை மீளப் பெற்றால், கொந்தளிப்பு தாமாகவே நிறுத்தப்படும் என ஆதினத்திடம் தான் குறிபட்டுள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.