இலங்கை நாணயத்தாள்கள் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!!

இலங்கையில் புழக்கத்திலிருக்கும் நாணயத்தாள்களை சேதப்படுத்துதல், அதில் மாற்றங்களை செய்தல், மற்றும் சிதைத்தல் என்பன தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாணயத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் விதிக்கப்படும் அளவிற்கு சட்டத்தில் இடமிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த செயற்பாட்டை நிறுத்திக்கொள்ளுமாறும், அவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ள நாணயத்தாளை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக மாற்றிக்கொள்ளுமாறும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2017.12.31ஆம் திகதிக்குப் பின்னர் இவ்வாறு சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்கள் மாற்றம் செய்யப்படமாட்டாது என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.