சாமியரின் மர்ம உறுப்பை நான் அறுக்கவில்லை: மாணவி திடுக்கிடும் தகவல்

கேரளாவில் மாணவி ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த சாமியாரின் மர்ம உறுப்பை அறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மாணவியின் இந்த துணிச்சல் செயலுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

இதற்கிடையில் சாமியாரான கணேசானந்தா தானாகத்தான் மர்ம உறுப்பை அறுத்துக் கொண்டதாகவும், தான் சாமியார் ஆகிவிட்டதால் தனக்கு அது தேவையில்லை என்பதால் அறுத்துக் கொண்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில், தான் சாமியாரின் மர்ம உறுப்பை அறுக்கவில்லை என்றும் இது காவல்துறையினர் கட்டிய கட்டுக் கதை என்று கூறியுள்ளார்.

இது குறித்து காவல்துறையினர், ஏன் அப்பெண் திடீரென்று இப்படி மாறி பேசுகிறாள் என்று தெரியவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் சாமியார் கணேசானந்தா, அங்குள்ள ஒரு வீட்டில் பூஜை செய்வதாக கூறி சட்டக் கல்லூரி மாணவியை பல ஆண்டுகளாக துன்புறுத்தல் செய்து வந்தார், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அம்மாணவி அவரின் மர்ம உறுப்பை அறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.