மைத்திரியின் ஆளுமை! உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு சாதனை வெற்றி

2017 ஆம் ஆண்டிற்கான உலக சமாதான சுட்டெண்ணில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது.

அதற்கமைய இலங்கை கடந்த வருடத்தை விடவும் 17 இடங்கள் முன்னோக்கி 80வது இடத்தை இலங்கை பெற்றுள்ளது.

இதுவொரு சாதனை மிக்க வளர்ச்சியாக உலக நாடுகளினால் பார்க்கப்படுகிறது.

2017 உலக சமாதான சுட்டெண்ணில் ஐஸ்லாந்து மிகவும் அமைதியான நாடாக தெரிவாகியுள்ளது.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரசாங்கம் அமைதியை உறுதிப்படுத்தியதன் மூலம் மேம்பட்ட ஆளுமை மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்கமைய இலங்கை இந்த பட்டியலில் முன்னோக்கி வந்துள்ளது.

இந்த பட்டியலில் 0.116 புள்ளிகளால் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது, 17 இடங்களை முன்னோக்கி வந்து 80 ஆவது இடத்தை இலங்கை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் ஆசிய நாடுகளில் இலங்கைக்கு முன்னால் பூட்டான் மாத்திரமே உள்ளது.

மேலும் இந்த பட்டியலில் இந்தியா 137வது இடத்திலும் பாகிஸ்தான் 152வது இடத்தையும் பெற்றுள்ளமைய குறிப்பிடத்தக்கது.