வடக்கில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி சூழ்நிலையை சாதகமாக்கிய தென்னிலங்கை கட்சி ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையை தோற்றுவிக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு- வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா கடந்த 12ம் திகதி நடைபெற்ற போது அயல் கிராமம் கேப்பாப்புலவில் அங்குள்ள மக்கள் சிலருடன் இணைந்த குறித்த கட்சி அங்கே குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் முல்லைத்தீவு,-கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை மீட்பதற்கு அமைதிவழிப் போராட்டத்தினை தொடர்கின்றனர். அப்போராட்டத்தினை அமர்க்களப்படுத்துவதற்கு இந்தக் கட்சி முயற்சிக்கின்றது.
அத்துடன் தமிழ்க் கட்சிகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அங்குள்ள பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.