எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் ராட்சத பலூனை அமைச்சர்கள் பறக்கவிட்டனர். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் 30ஆம் தேதி மதுரை ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடலில்நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தொடக்க விழாவாக ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, செங்கோட்டையன் உள்ளிட்ட 12 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.