இன்றைய ராசி பலன்கள் 19.06.2017

  • மேஷம்

    மேஷம்: அநாவசியச் செலவு களை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியா பாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். மதியம் 1.26 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

  • கடகம்

    கடகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: மதியம் 1.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படா மல் இருங்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வாகன பழுதை சரி செய்வீர்கள். தாய்வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 1.26 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

  • துலாம்

    துலாம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர் களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அமோகமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்-. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகன வசதிப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். அழகு, இளமை கூடும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத் தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: மதியம் 1.26 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் நீங்கும் நாள்.