17 பேரை பலிகொண்ட டெஹ்ரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் கடந்த 7-ம் தேதி நுழைந்த துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் உள்ளே புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் அருகே மறைந்த மதகுரு கோமெனியின் கல்லரை மாடத்தின் அருகே மற்றொரு தீவிரவாதி துப்பாக்கிசூடு மற்றும் குண்டு வெடிப்பு தாக்குதலை நிகழ்த்தினான்.
இந்த இரு தாக்குதல்களிலும் இரு காவலர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் உயிர்தப்பினர். இந்நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் தீவிரவாதிகள் ஐந்து பேர்தான் என உறுதிப்படுத்திய ஈரான் ராணுவம் சிரியாவின் கிழக்குப்பகுதியில் பதுங்கியுள்ள அவர்கள் மீது தாக்குதலை நடத்த திட்டமிட்டது.
அதன்படி, குறைந்த தூரம் சென்று நேருக்கு நேர் தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஐ.எஸ் தீவிரவாதிகளின் இருப்பிடம் நோக்கி செலுத்தப்பட்டுள்ளதாக ஈரான் படைத்தலைவர் தெரிவித்துள்ளார்.