கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் குப்பை கொட்டும் நபர்களை வீடியோ மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளிகளை ஊடகங்கள் ஊடக பிரச்சாரம் செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் வீ.கே.அநுர தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரங்கள் பல இடங்களில் குப்பை அதிகளவில் சேர்வதற்கான முழுமையான பொறுப்பை மக்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கொழும்பு நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து குப்பை கொட்டுவதற்காக உரிய முறை ஒன்று தயாரிக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு நகரத்தின் ஆங்காங்கே சேரும் குப்பைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவபிரிய எச்சரிக்கை விடுத்துள்ளதாக நேற்றைய தினம் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
3 நாட்களுக்குள் கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை அகற்றுமாறு ஜனாதிபதி முதலமைச்சரிடம் உத்தரவிட்டுள்ளார்.