எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரம் தொல்பொருள் நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது.
தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி உள்ளது. மேலும் இங்கு இஸ்லாமியர்கள் இடுகாடு மற்றும் நினைவு கற்கள்.
கண்ணாடி பீங்கான் உடைந்த பாத்திரங்கள், பாறை துகள்கள் மடாகல்கர், மாலதீவுகள், ஏமன் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
இதன் மூலம் இந்த நகரம் எத்தியோப்பியாவின் வர்த்தக மையமாக திகழ்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும் கடந்த கி.பி 10-ம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நகரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையே வர்த்தக தொடர்பு இருக்கலாம் என்றும் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் எத்தியோப்பியாவில் இருந்து தான் இஸ்லாம் மதம் உருவாகி இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.