ஒருநாள் தரவரிசை: சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பாகிஸ்தான் 6-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்கும்போது பாகிஸ்தான் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணிகள் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்தது. இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த பின், அனைத்து போட்டிகளிலும் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதன்மூலம் அணிகள் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கான நேரடி தகுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

தென்ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 116 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.