சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. முன்னணி வீரர்கள் சீட்டுக்கட்டு போல் சரிய இந்தியா 72 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திணறியது.
7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 76 ரன்கள் குவித்து துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.
ஜடேஜா பந்தை ஆஃப் சைடு அடித்தார். எதிர்முனையில் இருந்த ஹர்திக் பாண்டியா விரைவாக ஓடி வந்துவிட்டார். இந்த குழப்பத்தில் பாண்டியா அவுட் ஆனார். இந்திய வீரர்கள் யாரும் இதை விரும்பவில்லை. மேலும், ஜடேஜா அடுத்த ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் கூறுகையில் ‘‘இந்த ரன்அவுட் இந்தியா விரும்பவில்லை. ஜடேஜா இந்த ரன்அவுட்டில் ஒரு வீரர். அவர் ஹர்திக் பாண்டியாவிற்காக தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்திருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.