ஈவீனையில் குடும்பபெண்ணின் கை துண்டிப்பு மூன்று சந்தேக நபர்கள் கைது

புன்னாலைக்கட்டுவன் ஈவினை பகுதியில் கடந்த வாரம் பெண் ஒருவர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைதானவர்கள் ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவன் மற்றும் கோண்டாவில் பிரதேசங்களை சேர்ந்த 32 மற்றும் 20 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறினர்.

ஈவீனை கிழக்கு நிலாவரை  பகுதியினைச் சேர்ந்த கந்தசாமி கவேஸ்குமாரி வயது(44) என்ற மூன்று பிள்ளையின் தாய் மீது கடந்த 11ஆம் திகதி அயல்வீட்டில் குடியிருக்கும் சகாக்களினால் வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேற்படி வாள்வெட்டுக்கு இலக்கான குடும்ப பெண்ணின் வீட்டுக்கு அருகில் கோண்டாவில் பகுதியினை சேர்ந்த இளஞன் ஒருவன் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.

வாள்வெட்டு இடம்பெற்றதிற்கு முதல் நாள் 10ஆம் திகதி இரவு மேற்படி குடும்பத்திற்கும் அயல்வீட்டு இளைஞனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாக கூறப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வாள்வெட்டுக்கு இலக்கான பெண்ணின் பிள்ளைகள் மற்றும் ஏனையோர் இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக அறவிக்கப்பட்டது.

ஆத்திரமடைந்த இளஞன் இரவோடு இரவாக கோண்டாவில் பகுதிக்கு சென்றுள்ளான். மதியம் தனது சகாக்களுடன் வந்து பழிவாங்கும் நோக்குடன் வாள்வெட்டினை மேற்கொண்டதாக சுண்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

படுக்கையில் வெட்டப்பட்டு பெண்ணின் கை துண்டித்து தொங்கிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.