விஜய் பிறந்தநாளில் பிரபல திரையரங்கில் திரையிடப்படும் 4 மெகாஹிட் படங்கள்

தமிழ் சினிமாவில் வரலாறுகளை மாற்றி எழுதி வரும் நடிகர்களுள் ஒருவர் விஜய். அவரது 43-வது பிறந்தநாள் வருகிற ஜுன் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விஜய் பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். அதன் ஒருபகுதியாக விஜய் ரசிகர்களில் 43 பேர் உடலுறுப்பு தானம் செய்திருந்தார்கள்.

இன்னமும் பல்வேறு விதங்களில் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். திரையரங்கில் விஜய்யின் 4 மெகாஹிட் படங்கள் திரையிடப்படுகிறது.

மேலும் ஜோடிகளான விஜய் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. அதற்காக விஜய் ரசிகர்கள், விஜய்யின் பிரபலமான வசனங்களை டப்மாஷ் மூலம் அனுப்ப வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் விஜய் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று திரையரங்க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் `போக்கிரி’, `நண்பன்’, `துப்பாக்கி’, `தெறி’ உள்ளிட்ட 4 படங்களும் திரையிடப்படுகின்றன.