நாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா பாக்டீரியாவை பயன்படுத்த திட்டம்

தீவிரமாக பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியா வகையொன்றை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் டெங்கு காயச்சலை பரப்பும் நுளம்புகளை அழிக்கக்கூடிய பாக்டீரியா வகையொன்று ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த பாக்டீரியாவை இலங்கைக்கு கொண்டுவந்து பரப்புவதன் மூலம் டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளை அழிக்கமுடியும் என கூறியுள்ள அமைச்சர் சேனாரத்னஇ இதனை பெற்றுக்கொள்வது குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

டெங்கு நோய் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்குள் 200 பேர்வரை இறந்துள்ளதாக கூறிய அமைச்சர் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.