சீ.வீ. கே. சிவஞானம் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்

வடக்குமாகாண அவைத்தலைவர் பக்கச்சார்பாகச் செயற்படக் கூடாது என்பது தான் உண்மை. சீ.வீ. கே. சிவஞானத்தை முன்னிலைப்படுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டிருப்பது மிக மோசாமானதொரு முன்னுதாரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின்போது அடுத்த அவைத்தலைவர் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதே என ஊடகவியலாளர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை நோக்கி கேள்வி எழுப்பியபோது, அதற்கு மாவை சேனாதிராஜா அதனைப் பற்றி நாங்கள் ஆராய விரும்பவில்லை எனவும் இது தொடர்பில் எங்கள் கவனத்திற்கு யாரும் கொண்டு வரவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வினவியபோது,

சீ.வீ. கே. சிவஞானத்தை முன்னிலைப்படுத்தி வடமாகாண முதலமைச்சருக்கெதிரானநம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டிருப்பது மிக மோசாமானதொருமுன்னுதாரணம்.

அவ்வாறு வடமாகாண அவைத்தலைவர் செயற்படுவது முறையல்ல. ஆகவே, அவர்நிச்சயமாகத் தனது பதவியை இராஜினாமா மேற்கொள்வது தான் சரியானதுதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மிக நீண்டகால அரசியல் வாதி,நீண்டகாலமாகப் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வரும் ஒருவர்.

வடமாகாண அவைத்தலைவர் பக்கச் சார்பாகச் செயற்பட்டுள்ள விடயம் தொடர்பாக யாருமே அவருடைய கவனத்திற்குக் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை.

அவருக்கு அரசியல்ரீதியான மரபுகளும், நடைமுறைகளும் நிச்சயம் தெரிந்திருக்கும்.எனினும், மாவை சேனாதிராஜாவுக்கு அரசியலமைப்பு ரீதியான நடைமுறைகள்தெரியாமலிருந்தால் அதனை நினைத்து நாங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கிறது. அவர்இனியாவது இது தொடர்பில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.