டெங்கு ஒழிப்பு தொடர்பில் அனைத்து நிறுவனங்களில் விசேட பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நேற்று நடைபெற்ற கொழும்பு மாவட்ட சுற்றாடல் சம்மேளனத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்தப் பிரிவிற்கு நியமிக்கப்படும் நபர்கள் நாள்தோறும் அரை மணித்தியாலங்கள் டெங்கு ஒழிப்பு மற்றும் கழிவகற்றல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊடகங்களின் ஊடாகவும் சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஊடாக வழங்கப்படும் ஆலோசனைகள் பின்பற்றப்பட வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தில் வாழும் மற்றும் கொழும்பிற்கு வரும் அனைவரினதும் சுகாதாரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பிலான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிய சுற்றுநிருபங்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், டெங்கு ஒழிப்பு மற்றும் கழிவகற்றல் தொடர்பில் நிறுவன மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.