அல்ஜீரியாவில் தந்தை ஒருவர் தனக்கு 1000 லைக்குகள் வேண்டு என்பதற்காக தனது குழந்தையை உயரமான கட்டிடத்தில் இருந்து போடுவதற்கு துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையை ஒருவர், 15 வது மாடியின் ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையைப் பிடித்துக் கொண்டு அந்தரத்தில் தொங்க விடுவது போன்ற புகைப்படத்தை தாங்கிய பதிவை ”1000 லைக்குகள் வேண்டும், இல்லையெனில் குழந்தையை வெளியே விட்டுவிடுவேன்” என்ற வாசகத்துடன் குழந்தையின் தந்தை வெளியிட்டார்.
இதனை பார்த்த சமூகவலைதளவாசிகள் குழந்தையை இப்படி துஷ்பிரேயோகம் செய்கிறார் என கொந்தளித்துள்ளனர். மேலும் இவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த தகவல் பொலிசாரிக்கு தெரியவந்ததையடுத்து, இந்நபர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-ஆவது மாடியில் இருந்து, தனது குழந்தையை பெயர் குறிப்பிடப்படாத இந்நபர் தொங்கவிட்டதாக அல் அராபியா செய்திவலைத்தளம் தெரிவித்துள்ளது.