இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று இந்தியா கோப்பையை இழந்தது.
இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வி இந்தியாவுக்கு மோசமான நாள் என்று கூறி உள்ளார்.
இந்திய அணிக்கு அது மோசமான நாளாக இறுதி ஆட்டம் அமைந்து விட்டது. மிக முக்கியமான ஆட்டத்தில் அந்த நாள் வந்து விட்டது. அது நடக்கக் கூடாதுதான்.
இந்தியா சேசிங் செய்வதில் திறமையுடன் இருக்கிறது. அதைப் பற்றி நாம் அதிகளவு விமர்சிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.
இறுதி ஆட்டத்தில் சதம் அடித்து பஹார் ஓமான் நோபாலில் கேட்ச் ஆகி தப்பினார். அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியாவின் வாய்ப்புகளை எடுத்து கொண்டனர்.
டோனி அருமையான கேப்டன். அவர் உத்வேகம் அளிக்கக்கூடிய தலைவர். விராட்கோலி சிறந்த கேப்டனாக உருவெடுத்து வருகிறார். சாம்பியன்ஸ் கோப்பையில் பட்டத்தை இழந்ததை வைத்து அவரது திறமையை மதிப்பிடக்கூடாது. அவர் இந்திய அணியை வழி நடத்தி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.