முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு சதி 

வட மாகாண முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான சதித் திட்டம் ஏற்கனவே யாழிலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

ஆனால் குறித்த விடயத்தை நாங்கள் அவ்வேளையில் பெரிதுபடுத்த விரும்பவில்லை. சாதாரணமாக உள்ளூரிலிருக்கக் கூடிய அரசியல் காழ்ப்புணர்வு அல்லது அரசியல் போட்டி என்ற ரீதியிலேயே இந்த விடயத்தை எடுத்துக் கொண்டோம் எனப் புதிய தகவலொன்றை வெளியிட்டார் வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்.

யாழ்.திருநெல்வேலியிலுள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் சயந்தன் போன்றவர்கள் சேர்ந்து முதலமைச்சருக்கெதிராகச் சதித் திட்டம் தீட்டியதை நீங்கள் அறிந்தீர்க்களா? என ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவிக்கையில்இ முதலமைச்சரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான சதித் திட்டம் நாளடைவில் இது பரிணாமம் பெற்ற போது தான் இதன் பின்னாலுள்ள சக்தி இலங்கையின் பேரினவாதமென்றும்இ அதற்கு வடமாகாண சபையின் சில உறுப்பினர்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதையும் என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது எனவும் தெரிவித்தார்.

அடுத்த முதல்வராக வருவதற்கு ஆசைப்படும் சீ. வி.கே. சிவஞானம் தொடர்ந்தும் சபையை நடாத்துவதற்கு அனுமதிப்பீர்களா? அவர் சபையை நடத்தினால் சபை சுயாதீனமாக இயங்கும் என்று கருத்துகிறீர்களா? என ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்இ

உண்மையில் அவைத்தலைவர் என்பவர் நடுநிலையாகச் செயற்பட வேண்டிய ஒருவர். முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநரிடம் கொண்டு சென்று சமர்ப்பித்த போது நிச்சயமாக வடமாகாண அவைத்தலைவர் அங்கு சென்றிருக்கக் கூடாது. ஆனால்இ அவ்வாறு சென்றதன் மூலம் அவருடைய நடுநிலைத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளாகியுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

பகிர்வதற்க்கு