நீர்க்கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்படும் என நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோக இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பொனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. எனவே விரைவில் நீர்க் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆயிரம் லீற்றர் நீர் 12 ரூபாவிற்கு வழங்கப்படுகின்றது. எனினும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஒரு லீற்றர் 70 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
நீரை சுத்திகரித்து மக்களுக்கு வழங்குவதற்கு கூடுதலான செலவு ஏற்படுகின்றது. எனினும், நீர்க்கட்டணங்களை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.