அமெரிக்காவில் வசித்து வரும் சென்னையைச் சேர்ந்த தமிழர் தனது காருக்கு தனது பெற்றோரைக் குறிப்பிடும் வகையில் நம்பர் பிளேட் பதிவு செய்து பெற்றோரை நெகிழ வைத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் ஆனந்த் விருத்தகிரி. மினிசோட்டா மாகாணத்தில் வசித்து வருகிறார்.
அங்கு கார் எண் பதிவு செய்யும்போது கூடவே custom number plate (விருப்ப தேர்வு) செய்து கொள்ள முடியும்.
தேர்வு செய்யும் பெயர் 7 எழுத்துக்கள் மட்டுமே இருக்க முடியும். அது எண்ணாக இருக்கலாம் அல்லது எழுத்தாகவும் இருக்கலாம்.
ஆனந்த் தனது காருக்கு தேர்ந்தெடுத்துளள பெயர் “AMMAPPA” (அம்மா அப்பா). இனி, மினிசோட்டா முழுவதிலும் இந்த பெயரில் இந்த ஒரு வண்டி மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கும். வேறு காருக்கு இந்த அம்மா அப்பா பெயர் கிடைக்காது.
இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், என் அம்மாவையும்,அப்பாவையும் அழைத்து வந்து வண்டியுடன் சேர்த்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை நேற்று நிறைவேறியது.
மற்றுமொரு மகிழ்ச்சி – இது தந்தையர் தினத்தன்று நடந்தது என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.