சற்றுமுன் நீதிமன்றில் சரணடைந்தார் ஞானசாரர்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது சட்டத்தரணியூடாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றங்களினால் இரண்டு பிடிவிராந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலே நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

இதேவேளை, பாதுகாப்பினை உறுதி செய்தால் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலையாவார் என பொதுபல சேனா இயக்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.