சவுதிஅரேபியாவின் பட்டத்து இளவரசர் ஆக முகமது பின் நயீப் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக மன்னர் சல்மானின் மகன் முகமது பின் சல்மான் (31) புதிய பட்டத்து இளவரசர் ஆனார். அதற்கான உத்தரவை மன்னர் சல்மான் இன்று பிறப்பித்தார்.
ஏற்கனவே இவர் துணை பிரதமராகவும், ராணுவ மந்திரியாகவும் இருக்கிறார்.
பட்டத்து இளவரசர் ஆனதன் மூலம் சவுதிஅரபியாவின் அடுத்த மன்னர் ஆகும் தகுதியை பெற்றுள்ளார்.