`பீட்சா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். தனது முதல் படத்திலேயே தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கார்த்திக் சுப்புராஜ், அதனைத்தொடர்ந்து `ஜிகர்தண்டா’, `இறைவி’ படங்களை இயக்கினார்.
இந்நிலையில், தனுஷை வைத்து ஹாலிவுட் தரத்தில் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ள கார்த்திக் சுப்புராஜ், அதற்கு முன்னதாக பிரபுதேவாவை வைத்து புதிய படம் ஒன்றை தற்போது இயக்கி முடித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் விரைவில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் விரைவில் பிரம்மாண்டமாக நடத்த கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளாராம். அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மணிரத்னம் இணைந்து, படம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.