முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ்

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களினால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கையளிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தமிழரசு கட்சியினால் வடக்கு மாகாண சபையின் நீதிக்கான பேச்சாளர் கேசவன் சயந்தன் மற்றும் அஸ்மினால் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டன.

கடந்த 14ஆம் திகதி முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப் பட்டிருந்தது.

இதனையடுத்து வடமாகாணத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இது குறித்து கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் அழுத்தம் காரணமாக இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் முதலமைச்சருக்கு எதிராக கையளிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா தீர்மானம்  இன்று மாலை மீளப்பெறப்பட்டுள்ளது.