ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிராக, எதிர்வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை திமுக வின் தலைமையில் அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர் , இதன் போது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக துண்டு பிரசுரம் கொடுத்து மக்களை அதிகளவில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திமுகவினர் வலியிறுத்தி வருகின்றனர் ,
இந்த செயலானது தமிழக மக்கள் மத்தியிலும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பிரிவினையை தூண்டி விடும் செயலாகும் , என்று அங்குள்ள மக்கள் மிகுந்த மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர் ,
அதுமட்டுமின்றி இங்கு ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் சமூக விரோதிகள் என்று குறிப்பிட்டு துண்டு பிரசுரம் செய்து வெளியிட்டு வருகின்றார்கள்,
மற்றும் இங்கு வசிக்கும் ஈழத்தமிழர்களை இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட இருக்கிறர்கள்,
எனவே இந்த செய்தி அங்குள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் மனவேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது,
பாதுகாக்க வேண்டியவர்களே எங்களை அடித்து விரட்டுவதா ?
யாரிடத்தில் கேட்பது நியாயம் ?
அனைத்து காட்ச்சிகளும் சேர்ந்துதான் போராடுகிறது ……
எப்படி கிடைக்கும் நியாயம் ?