ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜூலை மாதம் பங்களாதேஷிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பங்களாதேஷ் அரசு 500 000 அமெரிக்க டொலர் நிதியுதவியை அண்மையில் வழங்கியுள்ளது.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதனை வழங்கியுள்ளார்.
இதன்போது, இந்த விஜயத்தை மேற்கொள்வது தொடர்பில் பேசப்பட்டதாக பங்களாதேஷ் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதியின் விஜயம் அடுத்த மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும் விஜயம் இடம்பெறும் தினம் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.