-
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்
-
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். வாக்குறுதியை நிறை வேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
-
கடகம்
கடகம்: திட்டமிட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். செல்வாக்குக் கூடும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.
-
கன்னி
கன்னி: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
-
துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.
-
தனுசு
தனுசு: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அமோகமான நாள்.
-
மகரம்
மகரம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
-
கும்பம்
கும்பம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். நண்பர்கள் உதவுவார்கள். தொழிலில் லாபம் வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வரும்-. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நினைத்ததை முடிக்கும் நாள்.