கருணைக் கொலை செய்யுங்கள்: ராஜீவ் கொலை வழக்கு கைதி கதறல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் தன்னை விடுவிக்கவில்லை என்றால் கருணைக் கொலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

சிறையில் 25 ஆண்டுகளை கழித்துள்ளதால், தங்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னை விடுவிக்கவில்ல என்றால் கருணைக் கொலை செய்துவிடுமாறு முதலமைச்சருக்கு ராபர்ட் பயாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பான கடித்ததை தனது வழக்கறிஞர் மூலம் முதலமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் விரைவில் முதலமைச்சரிடம் அளிக்கப்படவுள்ளதாக ராபர்ட் பயாஸின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.