பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி மிகப்பெரிய தவறை செய்து விட்டார் என பிரபல அறிவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றம், அதிகரிக்கும் மக்கள் தொகை, தொடரும் போர்கள் என பூமி அனுதினமும் அழிவை சந்தித்து வருகிறது.
பூமியின் சமநிலையைப் பாதுகாக்க பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலை தொடருமானால், பூமியில் மனிதர்கள் வாழ்வது மிகவும் கடினம் எனவும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதனிடையே, ‘பூமியை விட்டு நாம் வெளியேறி, வாழத்தகுந்த சூழலுள்ள வேறு கிரகங்களுக்குப் புலம் பெயர வேண்டும்’ எனப் பிரபல அறிவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
அண்மையில் பாரிஸ் காலநிலை தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.