இங்கிலாந்தில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 8 அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது.
இந்த தொடருக்கான மொத்த பரிசுத்தொகை 4.5 மில்லியன் டாலராகும். இதில் சாம்பியன்ஸ் பட்டம் வெல்லும் அணிக்கு 2.2 மில்லியன் டாலர் (சுமார் 14 கோடி ரூபாய்), 2-வது இடம்பிடிக்கும் அணிக்கு 1.1 மில்லியன் டாலர் (சுமார் 7 கோடி ரூபாய்) பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்திருந்தது.
அதன்படி பாகிஸ்தான் அணிக்கு 14 கோடி ரூபாயும், இந்தியாவிற்கு 7 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து மற்றும் வங்காள தேச அணிகளுக்கு தலா 0.45 மில்லியன் டாலர் (3 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா 58 லட்சம் ரூபாயும், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தலா ரூ. 39 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.