காணாமல்போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபித்து, அதனை செயற்படுத்துவது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைச்சாத்திட்டதன் பின்னர், அது தொடர்பான நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், காணாமல்போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல்போனோர் அலுவலக சட்டம் நிறைவேற்றப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து தமிழர் தரப்பு உட்பட சர்வதேசத்தினரும் இலங்கை மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.