விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவருடைய ஒவ்வொரு படங்கள் வெளிவரும் போதெல்லாம் அவருடைய ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட்கள் வைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார்கள். விஜய்யின் ‘பைரவா’ வெளிவந்த சமயம் நெல்லை விஜய் ரசிகர்கள் 150 அடியில் கட்அவுட் வைத்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்கள்.
இந்நிலையில், இன்று விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பலவகையிலும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வரிசையில், நெல்லை ரசிகர்கள் 4 ஆயிரம் அடியில் விஜய்க்கு பிறந்தநாள் போஸ்டர் ஒட்டி பிரம்மாண்ட சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே இதுவரை வேறு எந்த நடிகருக்கும் இத்தனை அடி நீளத்தில் போஸ்டர் அடித்து ஒட்டியது கிடையாது என்று கூறப்படுகிறது. அந்த வரிசையில் விஜய் ரசிகர்கள் செய்த ஒரு சாதனையாகவே இது கருதப்படுகிறது.