வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், “பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்.
குறிப்பாக நல்லாட்சியை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பின் கருத்துக்களை வெளிவிவகார அமைச்சருடன் பரிமாறிக் கொண்டதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.