எண் பார்வையில் கோளாறு, செவ்வாய் தோஷம், கண்நோய் போன்ற பிரச்சனைகளை நிவர்த்திக்கும் தலமாக விளங்குகிறது எண்கண் திருக்கோயில்.
முருகப்பெருமானின் இந்த எண்கண் திருத்தலம் திருவாரூர், கொடவாசல் வட்டத்தில் உள்ள முகுந்தனூருக்கு அருகில் உள்ளது. செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமான் இத்தலத்தில் தெற்கு முகமாக அமர்ந்து காட்சியளிப்பது தனிச்சிறப்பு.
செவ்வாய்தோஷ நிவர்த்தித் தலமாக எண்கண் கருதப்படுகிறது. கடன் பிரச்னை, சத்ருக்களின் தொல்லை, திருமணத்தடை போன்றவை இத்தலத்து முருகனை வழிபட நிவர்த்தியாகிறது.
கண்பார்வை குறைந்தவர்கள், கண்நோய் உள்ளவர்கள், பிரதிமாதம் விசாக நட்சத்திரத்தன்று எண்கண் திருத்தலத்தில் சண்முகார்ச்சனை செய்து வழிபட கண்பார்வை முழுகுணம் பெறுவது இத்தலத்தின் குறிப்பிடத்தக்க அற்புதமாகும். ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.