இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி காலமானார்.

இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி திருமதி. சிவகாமசுந்தரி அருச்சுனா தனது 81 வது வயதில் நேற்று நியூசிலாந்தில் சிவபதமடைந்தர்.

யாழ்ப்பாணம் புலோலி மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரியில் கற்று சட்டத்துறைக்குள் பிரவேசித்து 1972ஆம் ஆண்டு மார்கழி மாதம் 11ஆம் திகதி வழக்கறிஞ்ஞர் ஆனார்.

பின்னர் 1988ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்று மல்லாகம், மன்னார் மற்றும் கொழும்பு நீதிமன்றங்களில் நீதிபதியாக கடமையாற்றி இறுதியாக 1991ஆம் ஆண்டு தொடக்கம் 1996ஆம் ஆண்டு ஆவணி மாதம் 30ம் திகதி வரை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக சேவையாற்றி இளைப்பாறியிருந்தார்.

இவர் திருகோணமலையில் சேவையாற்றிய காலப்பகுதியில் பெண்களுக்கெதிரான வன்முறை தடுப்புப் பிரிவினை புதிதாக ஆரம்பித்து வைத்ததோடு பல காலமாக நிலுவையில் இருந்த காணி சம்பந்தமான பல வழக்குகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்திருந்தார்.